தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள மரக்காவலசை ராஜா முகமது காலனியில் உள்ள திடலில் ரமலான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. திருப்பூர் ஹசன் இமாமாக இருந்து, சிறப்பு தொழுகையை நடத்தி, குத்பா உரை நிகழ்த்தினார்.